பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் தற்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் எம். திரு. டி. தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.
இன்று சகோதர ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த நிலையில் ஒக்டோபர் நடுப்பகுதியில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கூடுமான விரைவில் பாடசாலைகளை திறப்பது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, கொரோனா தொற்று குறித்த சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் எம். திரு. டி. தர்மசேன இதன்போது தெரிவித்துள்ளார்.
Post a Comment