ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டைத் திறக்க வாய்ப்பில்லை! ரணில் வெளியிட்டுள்ள சந்தேகம்.

தற்போதைய முடக்கல் நிலை ஓக்டோபர் முதலாம் திகதி நீக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக உள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தக சம்மேளன கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
உள்ளுர் சந்தைக்கான டீசலை கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஒக்டோபர் நடு;ப்பகுதி வரை முடக்கல் நிலை நீடிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்புர் குறைவடைந்துவருவதே அதிக கரிசனைக்குரிய பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில் இலங்கையின் நிலவரம் எதிர்மாறானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.