முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து விவாதிக்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடன் நீதியமைச்சர் அலி சப்ரி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும், ஃபத்வாக் குழு உறுப்பினர்களும் நீதி அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்றுமுன்தினம் இரவு ஜூம் வழியாக இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன்போது முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் மாற்றங்கள் தொடர்பாக பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் அண்மையில் இது தொடர்பில் அமைச்சரவையினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
மார்க்க ரீதியான பல விடயங்கள் பற்றியும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் பற்றியும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடாக பிரிவு.
Post a Comment