பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பில் அமைச்சர் பெசில் விடுத்துள்ள உத்தரவு.

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில், சுகாதார நிபுணர்கள் குழுவினால் கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நேரடியாக ஆளுநர்கள் மற்றும் மாகாண சுகாதாரப் பணிப்பாளர்களுக்கு, அனுப்பி வைக்குமாறு, உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பெசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில், நேற்று(24) முற்பகல், கொவிட் ஒழிப்புக்கான செயலணியின் கூட்டம், வீடியோ தொழில்நுட்பத்தினூடாக இடம்பெற்றது. இதன்போதே இந்த உத்தரவினை வழங்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப்ப்பிரிவு தெரிவித்துள்ளது.

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு, தடுப்பூசி ஏற்றல் பணிகள் முழுமையடையும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்று, யுனிசெஃப் உள்ளிட்ட சிறுவர்கள் தொடர்பான சர்வதேச அமைப்புகள் மற்றும் உள்நாட்டின் சிறுவர் நோயியல் விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிறுவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எவ்விதத் தடைகளுமின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமாயின், பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் என்பன விரைவாகத் திறக்கப்பட வேண்டுமென்றும் அதற்கான உரிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், பெற்றோரின் அர்ப்பணிப்பு மற்றும் அக்கறை போன்றன இதில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும், விசேட வைத்திய நிபுணர்கள் அக்கூட்டத்தில் எடுத்துரைத்துள்ளனர்.

பாடசாலைகளைச் சுத்தப்படுத்தல் மற்றும் தொற்றுநீக்கல் பணிகளுக்கு, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களின் நேரடிப் பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.