சகல வியாபாரிகளுக்கும் ஜம்இய்யத்துல் உலமா சபை விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

தற்போது முழு உலகும் குறிப்பாக எமது தாய்நாடும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதோடு, பொருட்களின் விலைவாசி அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாம் சமூகப் பணிகளில் ஈடுபடுமாறும் நலிவுற்றோர், பாதிக்கப்பட்டோர், நோயுற்றோர் என தேவையுடையோர்களை இனங்கண்டு உதவி செய்யுமாறும் எமக்கு வழிகாட்டியிருக்கின்றது.

மக்களின் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் வியாபாரிகள் பெரும் பங்காற்றுகின்றனர். அல்லாஹு தஆலா அவர்களின் வியாபாரங்களில் அபிவிருத்தி செய்ய வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் பிரார்த்தனை செய்கின்றோம்.

வியாபாரிகள் எக்கட்டத்திலும் நேர்மை தவறிவிடக்கூடாது என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. நேர்மையான முறையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் துஆ செய்துள்ளதோடு, அவ்வியாபாரிகள் நாளை மறுமை நாளில் நபிமார்களுடனும், உண்மையானவர்களுடனும், ஷுஹீத்களுடனும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

எனினும், தற்போதைய சூழ்நிலையில் வியாபாரிகளில் சிலர் மக்களுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் பொருட்களை அவர்களுக்கு விற்பனை செய்யாமல் விலை உயர்வுக்காக பதுக்கல் செய்திருப்பதையும் அதற்காக அரசாங்கம் சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதையும் ஊடகங்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.

பதுக்கல் செய்பவர்கள் பாவிகள் எனவும், சபிக்கப்பட்டவர்;கள் எனவும் ஹதீஸ்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் எப்பொருளையும் பதுக்கல் செய்வது ஹராமாகும் என மார்க்க அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மார்க்க விளக்கத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஃபத்வாப் பிரிவு ACJU/FTW/2021/020-435 ஆம் இலக்க பத்வாவில் வெளியிட்டுள்ளது.


ஆகவே, இக்கட்டான இச்சூழ்நிலையில் வியாபாரிகள் மக்களின் நலன்கருதி அவர்களுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் அனைத்துப் பொருட்களையும் பதுக்கல் செய்யாது நியாய விலையில் விற்பனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அஷ்-ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர், ஃபத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.