பட்டதாரி பயிலுனர்களின் பயிற்சிக் காலத்தை மேலும் 6 மாதங்களுக்க நீடிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்திற்கு அமைய, குறித்த பயிற்சிக்காலத்தை டிசம்பர் 31 வரை நீடித்து அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நீடிக்கப்பட்ட காலப்பகுதிக்கான கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
குறித்த அமைச்சரவை தீர்மானத்தை அடுத்து, இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசிய இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகபெரும, அவ்வாறான நீடிப்பு இடம்பெறாது என்று குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment