இராணுவத் தளபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

மொடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகள் உயர்கல்வி நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல விரும்பும் மாணவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த தடுப்பூசிகளை வழங்குவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 

இந்த தடுப்பூசிகளைக் கோரும் மாணவர்கள் எவரும் தங்கள் வெளிநாட்டு கல்வி தொடர்பான ஆவண சான்றுகளை வழங்குவது கட்டாயமாகும் என்றும் அவர் கூறினார்.

நேற்றுமுன்தினம் பல உள்ளூர் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனை அருகே திரண்டு மொடர்னா தடுப்பூசி பெறுவதற்கான கோரிக்கையினை முன்வைத்தனர்.

அதன் பின்னர் அதிகாரிகள் மொடர்னா தடுப்பூசி தங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்ததையடுத்து பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.