வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவினால் இன்று(01) அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன நேற்று தெரிவித்திருந்த நிலையிலேயே இந்த அதிவிஷேட வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்களை கடந்த ஜூன் மாதம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனையடுத்து, சுமார் 3 மாதங்களுக்கு வெள்ளை சீனி இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது.


Post a Comment