நாட்டை முழுமையாக திறக்கும் சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை. தற்போதும் நாடு எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதென சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
கொவிட் மரணங்களை பொறுத்தவரை இறுதியாக 144 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. எனினும் மொத்தமாக 11 ஆயிரத்து இருநூறுக்கும் அதிகமான கொவிட் மரணங்கள் இதுவரை பதிவாகியுள்ளன.
இலங்கையின் கொவிட் மரண வீதத்தை பார்த்தால் இந்தியாவை விடவும் அதிக வீதத்தை வெளிப்படுத்துகின்றது. எனினும் தற்போது நீண்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிலைமைகளை எம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது.
நாளாந்தம் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றமை மற்றும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவு காரணமாக உடனடியாக நாட்டை திறக்க முடியமென நாம் கூற முடியாது.சிவப்பு எச்சரிக்கை மட்டத்தில் இருந்து இன்னமும் நாம் மீளவில்லை என எனவும் அவர் கூறினார்.
கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமையை அடுத்து எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை நான்குமணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார பணியகத்தின் தற்போது வரையிலான அவதானிப்புகள் குறித்து சகோதர ஊடகமொன்றுக்கு தெரிவிக்கும் போதே சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன இதனை கூறினார்.
Post a Comment