தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கும் புதிய சுற்று நிரூபம் வெளியானது

கொரோனா தொற்றாளர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பதற்கான புதிய சுற்றுநிரூபம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார சேவை பணியாளர்கள் மற்றும் அரச சேவைகளிலுள்ள கொவிட்19 தொற்றாளர்கள், தொற்றுக்குள்ளாகி 10 நாட்களின் பின்னர் நோய் அறிகுறிகளோ அல்லது காய்ச்சலோ இல்லையெனில், எந்தவித பரிசோதனைகளுமின்றி, தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியுமென அந்தச் சுற்று நிருபத்தில் கூறப்பட்டுள்ளது.

ஏனைய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருடன் நெருங்கிக் பழகியவர்கள், முழுமையான தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டிருக்கும் பட்சத்தில், கொவிட்19 பரிசோதனைகளை நடத்தி, நோய் அறிகுறிகள் இல்லையென்பது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில், தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்திய சிகிச்சைகளை வழங்கும் சேவைகளில் ஈடுபடும் சுகாதார சேவை அதிகாரிகளுக்கு, 3, 7 மற்றும் 10 நாட்களில் கொவிட்19 பரிசோதனைகளை செய்வதனூடாக, தொடர்ந்தும் சேவைகளில் ஈடுபட முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.