இணையவழி கற்பித்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கிலேயே, ஆசிரியர், அதிபர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒன்றரை ஆண்டுகளாக அரசாங்கம் அவர்களுக்கான வேதனத்தை உரியவாறு வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தற்போது ஆசிரியர், அதிபர்களுக்கு இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்பட்டுள்ள மேலதிக செலவுகளுக்காகவே, இரண்டு மாதங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment