நாளை முதல் 4 மாவட்டங்களில் 20 - 30 வயதுகளுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி.

மேல் மாகாணத்திலும், காலி மாவட்டத்திலும் 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக கொவிட்-19 தடுப்பு செயலணியின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களிலும் அவர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் கொழும்பு மாவட்டத்தில் அதற்கு மேலதிகமாக, விஹாரமாதேவி பூங்கா, தியத்த உயன, பனாகொடை இராணுவ முகாம் மற்றும் வேரஹெர இராணுவ வைத்தியசாலையிலும் நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.