30 வயதிற்கு மேற்பட்டோருக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்.

30 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத குறித்த வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் துரிதமாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

1,05,44,229 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

30 வயதிற்கு மேற்பட்ட 11.4 மில்லியன் பேரை இலக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கையில், இதுவரை 10.54 மில்லியன் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்ட சுமார் 1,38,000 பேர் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லையென உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இது கண்டறியப்பட்டதாக அமைச்சின் செயலாளர் N.M.M. சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் அதிகமானவர்கள் குருநாகல் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.

இதற்கிணங்க, தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு உடனடியாக தடுப்பூசியை வழங்குவதற்கு பிரதேச செயலாளர்களின் ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் N.M.M. சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.