விலை அதிகரிக்கப்படவுள்ள 3 முக்கிய பொருட்கள்?

நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விலைகள் தொடர்பான குழுவின் ஆய்வுக்கு அமைய வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னர் பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் எதிர்வரும் சில தினங்களில் அதிகரிக்கப்படும் என நுகர்வோர் இராஜாங்க அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை அதிகரிப்பு காரணமாக குறித்த மூன்று பொருட்களினதும் விலைகளை அதிகரிக்குமாறு குறித்த நிறுவனங்கள் 6 மாதங்களாக கோரிக்கை விடுத்ததாகவும், அது தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விலைகள் தொடர்பான குழுவினால் உரிய மதிப்பீடுகள் செய்யப்பட்டு வாழ்க்கைச் செலவு தொடர்பான உப குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் இராஜாங்க அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களும் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.