ஒக்டோபர் 2 வரை முடக்கத்தை நீடிக்கவும் - மீண்டும் வலியுறுத்தும் மருத்துவ சங்கம்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும்.

எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக் கருத்திற் கொண்டு, தற்போதைய முடக்கத்தை இம்மாதம் 18 ஆம் திகதி வரையும், ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையும் நீடிக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு 60 வயதுக்கு மேற்பட்டோர் , 18 - 60 வயதுக்கு இடைப்பட்ட நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றாம் கட்டமாக பைசர், அஸ்ட்ரசெனிகா மற்றும் மொடர்னா ஆகியவற்றில் ஏதேனுமொன்றை வழங்குமாறும் , ஸ்புட்னிக் தடுப்பூசியை முதற்கட்டமாக மாத்திரம் பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக இந்த தடுப்பூசிகளில் ஏதேனுமொன்றை வழங்குமாறும் இலங்கை மருத்துவ சங்கம் பரிந்துரைத்துள்ளது.

இலங்கை மருத்துவ சங்கத்தின் உறுப்பினர்கள் , இடைநிலை மருத்துவ கல்லூரி குழுவின் உறுப்பினர்கள் மற்றும் விடயத்துடன் தொடர்புடைய விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழுவின் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.