ஊரடங்கை நீடிக்குமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை - நாளை(17) தீர்மானம் என்கிறது அரசாங்கம்.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 21ஆம் திகதி திங்கட்கிழமை தளர்த்துவதற்கு அரசாங்கம் தயாராகிவரும் நிலையில், ஊரடங்கை நீடிக்குமாறு புதிய கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை இன்னும் அதிக அபாயத்தில் சிவப்பு வலயத்திலேயே காணப்படுவதால் தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீடிக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தி உள்ளது.

கொரோனா நோயாளர்கள், ஒட்சிசன் பயன்பாடு மற்றும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தாலும், தனிமைப்படுத்தல் ஊரடங்கை அமுல்படுத்தினால் மாத்திரமே இவ்வாறு கொரோனா பரவலைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியுமெனவும் அந்த சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டே விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இது இவ்வாறு இருக்க எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்களை நீடிப்பதா? இல்லையா? என்பது தொடர்பான இறுதி தீர்மானம் நாளை இடம்பெறவுள்ள கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின் போது எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை இடம்பெறும் கூட்டத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பிலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வயதெல்லை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.