SLBC முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் நிறுத்தப்படவில்லை; மக்கள் வீணாக குழப்பமடைய வேண்டாம்.

இரண்டாவது இணைப்பு;

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்(SLBC) முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் வழமை போன்று 102.1, 102.3 தேசிய சேவையின் அலைவரிசையில் இன்று இரவு 8 மணி முதல் மீண்டும் ஒலிபரப்பாகும் என அதன் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலாவது இணைப்பு:

சுமார் 70 வருடங்கள் பழமை வாய்ந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) தமிழ் தேசிய சேவை மற்றும் முஸ்லிம் சேவை ஆகியன நேற்று(16) திங்கட்கிழமை மு.ப 11.30 மணி முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக SLBC தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்வி அமைச்சின் அனுசரனையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் 'விசன் எப்.எம்' எனும் கல்விச் சேவையொன்று நேற்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் தேசிய சேவையின் 102.1 அலைவரிசையும், பிறை எப்.எம் இயங்கிய 102.3 அலைவரிசையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிறை எப்.எமிற்கு 90.1 எனும் அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய சேவைக்கு எந்தவித அலைவரிசையும் ஒதுக்கப்படவில்லை.

இதனால் தமிழ் தேசிய சேவை மற்றும் அதில் ஒலிபரப்பாகிய முஸ்லிம் சேவை ஆகியவற்றின் நிகழ்ச்சிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், "முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் இன்று(17) செவ்வாய்க்கிழமை முதல் தென்றல் எப்.எம் இல் ஒலிபரப்பாகும்" என தமிழ் தேசிய சேவையின் பணிப்பாளர் கணபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ் தேசிய சேவை தொடர்பில் தற்போது எதுவும் கூற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த புதிய சர்ச்சை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெறவுள்ளதாதக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.