இனி வருவது ஐபிரிட் லொக்டவுன் (Hybrid Lockdown)?

ஐபிரிட் லொக்டவுன் (Hybrid Lockdown) நடைமுறையொன்று தொடர்பில் இனி கவனம் செலுத்தப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் நேற்று (27) கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள முடக்க நிலைக்கு பதிலாக, ஐபிரிட் லொக்-டவுன் (Hybrid Lockdown) முறையிலான முடக்க நிலையொன்றை அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாளாந்த சம்பளத்திற்காக வேலை செய்வோர் தொடர்பில் மாத்திரமே தமக்கு பிரச்சினை உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனைய தரப்பினருக்கு வேலைகளை செய்துக்கொள்ளும் வகையிலான நடைமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டிட நிர்மானம், வீதி புனரமைப்பு போன்ற பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

வர்த்தக நிலையங்களை உரிய வகையில் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.