நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அறிவிப்பு.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களின் தாக்கமே காரணம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் டொக்டர் ரமேஷ் பத்திரண இதனை குறிப்பிட்டார்.

கொரோனா தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பெரும்பாலானவர்களுக்கு கொமொர்பிடிட்டி எனப்படும் பிற சிக்கல்களும் இருந்ததாக கூறினார்.

மேலும் இறந்தவர்களில் சிலர் தடுப்பூசி போடப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அமைச்சரவை இணை ஊடகப்பேச்சாளர் ரமேஷ் பத்திரண கூறினார்.

இதேவேளை நேற்றுடன் முடிவடைந்த கடந்த ஒருவார காலத்தில் மட்டும் இலங்கையில் சுமார் 450 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,645 ஆக உயர்ந்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.