புதிய சுகாதார அமைச்சர் நாட்டுமக்களுக்கு விடுத்துள்ள முதலாவது அறிவிப்பு!

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சவால்களை தோற்கடிக்க இலங்கையின் அனைத்து மக்களும் சமூக பொறுப்புணர்வுடன் செயற்படுவது  அவசியமானது என புதிதாக நியமிக்கப்பட்ட சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

முன்னர் ஊடகத்துறை அமைச்சராக பணியாற்றிய கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்று நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின் போது சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து தனது ட்விட்டர் பக்கதின்னுடாக இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸால் ஏட்பட்டுள்ள சவால்களை தோற்கடிக்க நாட்டின் அனைத்து மக்களின் பங்கேற்பு மற்றும் ஒத்துழைப்புக்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவரது புதிய நியமனத்தைத் தொடர்ந்து, முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வாணியாராச்சி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாள்வதில் சிறப்பாக பணியாற்றியதற்காக அமைச்சர் ரம்புக்வெல்ல ட்விட்டர் பதிவின் ஊடாக பாராட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.