பயணக் கட்டுப்பாடு குறித்து – பேராசிரியர் நீலிகா மளவிகே வலியுறுத்தும் விடயம்.

பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அமுல்படுத்துவது குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் “பேராசிரியர் நீலிகா மளவிகே” தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

உலகில் இடம்பெற்ற போர்களை விட இந்த கொரோனா வைரஸினால் உயிர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனவே அந்தவகையில் கண்ணுக்குத் தெரியாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க ஒரு நாடு என்ற ரீதியில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் “பேராசிரியர் நீலிகா மளவிகே” குறிப்பிட்டார்.

ஆகவே இந்த விடயத்தில் வெளிப்புற தாக்கங்களை வைத்து முடிவுகளை எடுக்காமல் அறிவியல் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.