மாகாண எல்லைகளை கடப்போருக்கு எச்சரிக்கை!

அத்தியாவசிய காரணங்கள் தவிர வேறு காரணங்களுக்காக மாகாண எல்லைகளை கடக்கும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

கடந்த நாட்களில் மாகாண எல்லைகளைக் கடந்து செல்ல முற்பட்ட பலர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், அது அரச பணியாளர்களுக்கு மாத்திரமே இடம்பெறுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நெருங்கிய உறவினர்களின் மரணச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக செல்பவர்களும் எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.