மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் மாத்தளை பகுதியில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சியும் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஆராச்சியும் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.