பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக 7 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
புதிய அமைச்சர்களின் விபரங்கள்
வெளியுறவு அமைச்சராக பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
வெகுசன ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெரும பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன், போக்குவரத்து அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
மின் சக்தி அமைச்சராக காமினி லொகுகே பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு பொறுப்புக்கு மேலதிகமாக, நாமல் ராஜபக்ஸவிற்கு, அபிவிருத்தி இணைப்பு கண்காணிப்பு அமைச்சு பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது
Post a Comment