டெல்டா திரிபினால் ஏற்பட்டுள்ள கொரோனா அலையில், ஒருவரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் மத்தியகுழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், ஆரம்பகாலத்தில் இந்த கொவிட் வைரஸானது ஒருவரிடமிருந்து 2.5 நபர்களுக்கு பரவக்கூடியதாக இருந்தது.
அதன் பின்னர் வந்த அல்பா திரிபானது ஒரு நபரிடமிருந்து 4.5 நபர்களுக்கு பரவக்கூடியதாக இருந்தது. தற்போது ஏற்பட்டுள்ள நான்காவது அலையில் டெல்டா திரிபினால் ஒரு நபரிடமிருந்து 8 பேருக்கு வைரஸ் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இதேவேளை, முதலாவது அலையில் மரணவீதம் 0 க்கும் குறைவாகக் காணப்பட்டது. எனினும், தற்போது மரண வீதமானது 4 – 5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதனூடாக தற்போதைய கொவிட் பரவலின் வீரியத்தை எம்மால் ஊகித்துக்கொள்ள முடியுமானதாக இருக்கும்.
மேலும் பல திரிபுகளால் இலங்கையில் ஐந்தாவது அலையொன்று ஏற்படுமாயின் அதிலிருந்து நாம் மீளுவது என்பது மிகக்கடினமானது.
உடல், உள ரீதியான பாதிப்புகளை போன்றே பொருளாதார ரீதியிலும் பாரிய நெருக்கடியை நாம் சந்திக்க நேரிடும் என்றார்.
எனவே, பொதுமக்கள் தற்போதைய நிலைமையின் தீவிரத்தை அறிந்து செயற்படுமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.
Post a Comment