நேற்றைய கொவிட் செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சருக்கு கொரோனா!

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ Facebook கணக்கில் இடுகையொன்றை இட்டுள்ள அவர், தனது பணிக்குழாம் ஊழியர்கள் சிலருக்கு கொவிட் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொண்ட Rapid Antigen சோதனையில் தனக்கும் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அரச அதிகாரிகள் உள்ளிட்ட தனது நெருக்கமான அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முகம் கொடுத்துள்ள பேரழிவு நிலையில் உங்களதும் முழு சமூகத்தினதும் பாதுகாப்பு கருதி இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது எம் எல்லோரினதும் பொறுப்பாகும் என்பதை நினைவூட்டுவதாக அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இறுதியாக நேற்றையதினம் (27) ஊரடங்கு தொடர்பான முடிவு எடுக்கப்பட்ட ஜனாதிபதி தலைமையிலான கொவிட் செயலணி கூட்டத்தில் பங்குபற்றியிருந்தார்.

அக்கூட்டத்தில், பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை, நிவாரண விலைக்குப் பெற்றுக்கொடுக்க, சதொச ஊடாக வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில், அமைச்சர் பந்துல குணவர்தன தெளிவுபடுத்தியிருந்தாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, ஷன்ன ஜயசுமண, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்க, பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன உள்ளிட்ட அதிகாரிகள், கொவிட் ஒழிப்புச் செயலணியின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.