பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை.

அரச ஊழியர்களை வேலைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அரசின் தீர்மானம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தீர்மானத்தின் போது அதிகாரிகள் ஒரு முக்கியமான விடயத்தை கவனத்திற் கொள்ளாமல் விட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அரச ஊழியர்கள் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை மாத்திரமே செலுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வேலைக்கு வருபவர்களின் வீட்டில் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார்களா என்பது தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் எதிர்காலத்தில் நிலமை மாறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.