பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என்ற தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முன்வைத்த ஆலோசனை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்
"இல்லை தற்காலிகமாக இல்லை. அதனால் இரு பிரச்சினைகள் காணப்படுகின்றன. தடுப்பூசிகளில் முதலாவது அளவு வழங்கப்பட்டிருந்தாலும் இரண்டாவது அளவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கே எமக்கு நீண்ட காலம் தேவைப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த நடைமுறை சாத்தியப்படலாம். ஆனால் தற்போது இந்த விடயம் சாத்தியமான விடயமல்ல. உதாரணமாக மாலை நான்கு மணிக்கு வேலை முடிந்தவுடன் 05 மணி பஸ் அல்லது புகையிரத்திற்கே அனைவரும் செல்ல முயற்சிப்பீர்கள் ஆனால் கொரோனா தொற்று பரவும் என நினைத்து 06 மணிக்கான பஸ் அல்லது புகையிரதத்தில் நீங்கள் பயணிப்பீர்களா. உண்மையில் சென்று பார்த்தால் ஒருவரும் இருக்க மாட்டார்க்ள. இந்த நிலையில் அனைவரிடமும் தடுப்பூசிக்கான சான்றிதழை எவ்வாறு பரிசோதனை செய்வது".
Post a Comment