வேகமாக பரவும் டெல்டா மாறுபாடு - மக்களுக்காக அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்.

உலக நாடுகள் பலவற்றில் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் டெல்டா கொவிட் -19 திரிபு இலங்கையிலும் அதிவேகமாக பரவி வருவதால் அனைவரும் விரைவாக கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

அத்துடன், அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்ககளம் அறிவித்துள்ளது.

கொவிட் தொற்றாளர்களில் 1.5% மானோர் மரணிக்கின்றனர். பெரும்பாலானோர் தீவிர சிகிச்சை பிரிவுகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனவே ஆட்கொல்லி கொவிட் வைரஸிடமிருந்து தற்காத்து கொள்ள பின்வரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • அத்தியாவசியமான காரணங்கள் தவிர்ந்த வேறு விடயங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
  • திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் பிற விழாக்களில் பங்கேற்பதை முற்றாக நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. 
  • பொது இடத்திற்கு செல்லும் போது முகக்கவசம் (மாஸ்க்) அணிவது அவசியம்.
  • அறைகள், அரங்குகள், மின்தூக்கி (லிஃப்ட்) மற்றும் வாகனங்கள் போன்ற மூடப்பட்ட பகுதிகளில் கூட்டமாக இருப்பதை தவிர்க்கவும்.
  • அவ்வப்போது கைகளை சவர்க்காரம் கொண்டு கழுவுவதோடு, மற்றையவர்களிடமிருந்து இரண்டு மீற்றருக்கு மேல் இடைவெளியை பேணுங்கள்.
  • நாட்பட்ட நோய்களை கொண்டுள்ளவர் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்குமாறு அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.