இன்று முதல் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள புதிய முறைமை.


பிறப்பு, இறப்பு மற்றும் திருமண பதிவுச் சான்றிதழ்களை இணைய வழியில் இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சான்றிதழ்களை இணைய வழியில் மூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கையடக்க தொலைப்பேசி மற்றும் கணினி வழியாக ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் அத்துடன், கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி இதற்கான கட்டணங்களைச் செலுத்த முடியும்.

விரைவுத் தபாலில் அல்லது மிக அருகாமையில் இருக்கும் பிரதேச செயலகத்திலோ சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://online.ebmd.rgd.gov.lk என்ற இணைய தளத்திற்குள் பிர வேசித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக் கையைச் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் www.rgd.gov.lk என்ற இணைய தளத்திலும் 0112889518 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலமும் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.