அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் புதிய கல்வி அமைச்சர் வெளிட்ட கருத்து....

ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையை கலந்துரையாடல் ஊடாக தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக புதிய கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி அமைச்சர் நேற்று (17) பிற்பகல் வண. எல்லே குணவங்ச தேரரை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறித்த கலந்துரையாடலுக்கு பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

"கல்வி அமைச்சு போன்று ஒவ்வொரு அமைச்சின் பணியும் கடினமானதாகவும். சகோதர அமைச்சர்கள் மற்றும் ஜனாதியுடன் இணைந்து இந்த சவாலையும் தேசியப் பணியையும் நிறைவேற்ற நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம். நமது பிள்ளைகள்தான் இந்நாட்டு எதிர்காலம். அதை ஆழமாக புரிந்துகொண்டு செயல்பட நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். கலந்துரையாடல்கள் மூலம் ​​ஆசிரியர் பிரச்சினையை நாங்கள் கையாள்வோம். என்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.