ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணக் கொடுப்பனவு - அரசாங்கம் அறிவிப்பு.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 2,000 ரூபாவை நிவாரணக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக நாடு முடக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தலா 5 ஆயிரம் ரூபாவை மாதாந்த நிவாரணக் கொடுப்பனவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், தற்போது 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் என்.எம்.எம். சித்ரானந்தவினால் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.