நாட்டின் வடக்கு, தெற்கு பகுதிகளில் உணரப்பட்ட நில அதிர்வுகள்!

நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நேற்றையதினம் சிறியளவிலான இரு நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டை மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.20 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நில அதிர்வு ரிச்டர் அளவுகோளில் 2.0 மெக்னிடியூட் ஆக பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று மதியம் யாழ்ப்பாணத்திலிருந்து 610 கிலோ மீற்றர் தொலைவில் 5.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ளதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலநடுக்கம் நேற்று (24) பிற்பகல் 12.35 மணிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.