மத்திய மாகாணத்தில் வாகன வருமான வாிப் பத்திர விநியோகம் இடைநிறுத்தம்.

மத்திய மாகாணத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான வரிப்பத்திர விநியோகம் தற்காலிகமான இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 17 ஆம்திகதி முதல் செப்டெம்பர் 14 ஆம்திகதி வரை வாகன வருமான வரிப்பத்திர வநியோக நடவடிக்கையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி காலப்பகுதியினுள் காலாவதியாகும் வாகன வருமான வரிப்பத்திரங்களை மீள புதுப்பிக்கும்போது எவ்வித அபராதமும் அறவிடப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.