வௌிநாடு செல்லவுள்ளவர்களுக்கான முக்கிய அறிவித்தல்.

தொழிலுக்காக வௌிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16,416 ரூபாவினை அறவிட உள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துக் கொள்ளும் நபர்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வதற்கு முன்னர் அவர் செல்லும் நாட்டிற்கு அமைய தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் தொழிலுக்காகதான் வௌிநாடு செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தடுப்பூசி வேலைத்திட்டதில் இவர்களை இணைத்துக் கொள்ள முடியாது என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய தெரிவித்தார்.

இதேவேளை வெளிநாடுகளுக்கு பயணமாகவுள்ளவர்களுக்காக, ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளமுடியும் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

ICTA எனப்படும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், சுகாதார அமைச்சு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

அதற்கமைய, https://covid-19.health.gov.lk/certificate/ என்ற இணையத்தளத்துக்கு பிரவேசிப்பதன் மூலம் இந்த ஸ்மார்ட் கொவிட் தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.