நாட்டை முடக்குவதென்பது ஜனாதிபதியால் சில நிமிடங்களில் எடுக்கக்கூடிய தீர்மானமாகும் - அமைச்சர் தகவல்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தீர்வாக அரசாங்கம் நாட்டை முடக்காதிருப்பது ஏன் என வர்த்தக அமைச்சரான பந்துல குணவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் இன்று (18) கேள்வியெழுப்பினர்.

புறக்கோட்டையில் இன்று (18) முற்பகல் வர்த்தக நடவடிக்கைகளை கண்காணித்த போதே அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் வினவப்பட்டது.

நாட்டை முடக்குவதென்பது ஜனாதிபதி ஒரு நாளில் சில நிமிடங்களுக்குள் எடுக்கக்கூடிய தீர்மானம் என அமைச்சர் பந்துல குணவர்தன இதன்போது கூறினார்.

ஆனால், கொரோனாவால் பாதிக்கப்படாத மக்களை எப்படி வாழ வைப்பது என்று ஒரு அரசாங்கமாக தாம் சிந்திக்க வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.