நாட்டை முடக்குவது தற்போது தீர்வாகாது - அமைச்சர் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாட்டில் முடக்க நிலையை  அமல்படுத்துவது தற்போது தீர்வாகாது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில் இந்த முக்கியமான தருணத்தில் நாட்டை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

சுகாதார விதிமுறைகளை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் நாட்டில் பல போராட்டங்களுக்குத் தூண்டியதாகக் கூறிய அமைச்சர் ரணதுங்க, இது வைரஸின் குறிப்பிடத்தக்க பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

அரசாங்கத்தால் முடக்க நிலை விதிக்கப்பட்டால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் முடக்க நிலை விதிப்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன் பொதுமக்கள் மற்றும் பிற துறைகளில் ஏற்படும் தாக்கத்தை கருத்தில் கொள்ளுமாறு அவர் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.