“அமைச்சரவை தீர்மானங்களை ஏற்க முடியாது!” ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்கம் அதிரடி அறிவிப்பு

தமது சம்பளப் பிரச்சினை தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்

இதன்படி, தமது போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்

“ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கவும், 2018 ஆம் ஆண்டில் கல்வியமைச்சினால் சம்பள ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட யோசனையை, அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு யோசனைகள் தொடர்பான இரண்டு தீர்மானங்களையும் ஏற்றுக் கொள்ள முடியாது.எமது போராட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்கொண்டு செல்கின்றோம். என்பதை தெளிவாக கூறுகின்றொம்.

நாம் இன்று அனைத்து தொழிங்சங்கங்களையும் ஒன்றிணைத்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்வோம்.

இதன்போது அடுத்த நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்போம்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானத்தைநாம் ஏற்றுக் கொள்வதில்லை. இவ்வாறு ஏற்றுக் கொள்ளமாட்டோமட் என்ற நிலையில் இருக்கும் போது, பலாத்காரமாக அதனை ஏற்றுக் கொள்ளவைக்க முயற்சித்தால், பயன்கிடையாது.

இதுகுறித்து கலந்துரையாட வேண்டுமெனில் அரசாங்கத்திற்கு மேலும் சந்தர்ப்பம் வழங்குகின்றோம்”

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.