நாடு முடக்கப்படுமா? மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி!

தீவிரமாக பரவி வரும் கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட கூட்டம் சற்று முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது. 

மாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இதற்கு செவிசாய்ப்பதாக கூட்டம் முடிந்து வெளியேவந்த இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொவிட் பரவல் நிலைமை காரணமாக ஒருவாரத்துக்கு நாட்டை முடக்குமாறு மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் நேற்று வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற ஜனாதிபதி தயாராகி வருவதாக சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் நாடு முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி, அதற்கான திகதி மற்றும் நேர காலத்தை தீர்மானிப்பார் எனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.