நாட்டை முடக்கவேமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை - அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு.

என்ன நடந்தாலும், நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் அரசாங்கம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில், இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டை முடக்காதிருப்பதற்கு தாக்கம் செலுத்தும் சில காரணிகள் தொடர்பில், அமைச்சரவையை ஜனாதிபதி தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகில் இந்த கொவிட் பரவல் குறித்து மூன்று வகையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய, முழுமையாக நாட்டை முடக்குவது முதலாவது நடவடிக்கையாகும்.

இரண்டாது தடுப்பூசியை 40, 50 சதவீதமளவில் செலுத்தியதன் பின்னர், நாட்டை முழுமையாக திறப்பது இரண்டாவது நடைமுறையாகும்.

மூன்றாவது நடைமுறையானது, ஓரளவான தரப்பினக்கு தடுப்பூசியை செலுத்தி, நாட்டை பகுதியளவில் திறக்கும் நிலை உலகளவில் உள்ளது.

இதற்கமைய, இலங்கையின் சுகாதாரத்துறையும், கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு செயலணியும், இந்த மூன்றாவது நிலையில் வைத்திருக்க தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு இறுதித் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.