மோசமான தீவிர நிலையை அடைந்தது இலங்கை! அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை.

இலங்கையில் தீவிரமான சுகாதார நெருக்கடி உருவாகி வருவதையும், ஓரிரு வாரங்களில் கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகவோ அல்லது மும்மடங்காகவோ அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதையும் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து சுகாதார அதிகாரிகள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், பிசிஆர், ஆன்டிஜென் சோதனை கருவிகள் மற்றும் ஒட்சிசன் கருவிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டுப்பாடுகள் தளர்த்துவதை மக்கள் தவறாகப் பயன்படுத்துவது பாதிப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் நோய் பரவுவதற்கு காரணமாகின்றனர் என்றார்.

மக்கள் சில நேரங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை பொருட்படுத்தாமல் திருமண நிகழ்வுகளை ஏற்பாடு செய்தனர்.

சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட நோயாளிகளிடையே ஒட்சிசன் தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நோயாளிகள் கடுமையான அறிகுறிகளை உருவாக்குகின்றனர். மேலும், அவர்களுக்கு நீண்ட காலத்திற்கு ஒட்சிசனின் உதவி தேவை என்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன கூறினார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.