மக்கள் பொறுப்புடனும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதும் நடந்து கொண்டால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பயனுள்ளதாக அமையாது என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்ற போதே இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பைத் தடுக்க நாட்டைப் முடக்குவது மட்டுமே தீர்வு அல்ல, மேலும் நோயை எதிர்த்துப் போராடும் முயற்சியில் மக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
"மக்கள் முகக்கவசம் அணிவது, ஒரு மீட்டர் தூரத்தை பேணுதல் மற்றும் நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்ப்பது போன்ற சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றவில்லை என்றால் ஊரடங்கு உத்தரவு மட்டும் பயனுள்ளதாக இருக்காது" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தங்கள் தனிப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றினால், நோய் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும், மக்களின் ஒத்துழைப்பு இதில் முக்கியமானது என்றும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளார்
"நாட்டில் உள்ள மக்களிடமிருந்தும் வெளிநாட்டவர்களிடமிருந்தும் எங்களுக்கு ஆதரவு தேவைப்படும் நேரம் இது. அருகிலுள்ள மருத்துவமனைக்கு உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள். இந்த முக்கியமான தருணத்தில் மக்களின் பங்களிப்பு முக்கியமானது, "என்றும் அவர் கூறியுள்ளார்.(NC)
Post a Comment