இலங்கை ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

அதிபர்−ஆசிரியர் சம்பள முரண்பாடு பிரச்சினைக்கு அரசாங்கம், எதிர்வரும் திங்கட்கிழமை (30) தீர்வொன்றை வழங்கினால், தமது போராட்டத்தை கைவிட தயார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நேற்று (28) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, ஒரு வருடமும் 5 மாதங்களும் கடந்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

மாணவர்களுக்கு இணைய வழியாக கல்வி கற்பிக்கப்பட்ட போதிலும், 43 லட்சம் மாணவர்களுக்கும் உரிய வகையில் கல்வியை கற்பிக்க முடியவில்லை என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.


சுமார் 40 வீதமான மாணவர்களுக்கே இணைய வழியாக கல்வியை கற்பிக்க முடிந்ததாக கூறிய அவர், எஞ்சிய 60 வீதமானோருக்கு கற்பிக்க முடியவில்லை என குறிப்பிட்டார்.

இந்த 40 வீதமான மாணவர்களுக்கு தமது கையிலுள்ள பணத்தை செலவிட்டே, ஆசிரியர்கள் கற்பித்தலை தொடர்ந்ததாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.

இந்த நடவடிக்கை கடந்த 48 நாட்கள் மாத்திரமே தடைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மாணவர்களுக்கு இணைய வழியான கல்வியை மீண்டும் ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் தம்மிடம் கேட்டுக்கொண்டதாகவும், அதனை திங்கட்கிழமை (30) முதல் ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

தமது பிரச்சினைகள் குறித்து, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு சாதகமான தீர்மானமொன்று கிடைத்தால், திங்கட்கிழமை (30) முதல் மாணவர்களுக்கான கல்வியை ஆரம்பிக்க முடியும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகின்றார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.