கொவிட் பரவல் நிலைமை காரணமாக நாட்டை முடக்குவது தொடர்பில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் நாட்டின் நிலைமைக்கமைய மாற்றமடையக்கூடும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 105 செவிலியர்களுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 15 அறைகளை இதற்காக ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வைத்தியசாலையில் தற்போது மேலதிகமாக 3500 படுக்கைகள் இருப்பதாகவும் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹோமாகம பகுதியில் தனியார் கொவிட் பரிசோதனை நிலையங்களில் பரிசோதனை செய்ய வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Post a Comment