விசேட செயல்துறைக்கட்டளை வெளியானது- கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

பாடசாலை கட்டமைப்பில் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் கடமைக்கு சமூகமளித்தல் தொடர்பாக கல்வி அமைச்சு விசேட செயல்துறைக்கட்டளை வெளியிட்டுள்ளது.

இந்த செயல்துறைக்கட்டளைகள் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேசங்களுக்கு பொறுப்பான பிரதி மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசு சேவையை சரியான முறையில் முன்னெடுப்பதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் கடமைக்கு சமூகமளிக்கும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தமது வரவை பதிவு செய்யும் அதாவது கையொப்பம் இடுவதற்கான சந்தர்ப்பத்தை அதிபர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடமைக்கு சமூகமளிக்காத ஊழியர்களின் வருகை தொடர்பில் பொதுவான விடுமுறை நடைமுறை பின்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டு அதன்பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்தும் இதன் ஊடாக அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒன்லைன் Online கல்வி தொடர்பான உபகரணங்கள் இல்லாத மாணவர்களின் கற்பித்தல் நடவடிக்கைகளை உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்ட தொலைநிலை கல்வி மையங்களில் கற்பித்தல் நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசேட தேவையுடைய மாணவர்களை பெற்றோர்களின் அனுமதியுடன் சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக பாடசாலைகளுக்கு அழைத்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலாளர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.