மட்டக்களப்பு - ஓட்டமாவடி பகுதியில் கொரோனா தொற்றினால் உயிரிழிப்பவர்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 700 ஜனாஸாக்களை மட்டுமே குறித்த பகுதியில் அடக்கம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் இதுவரையில் 1,279 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம், 50க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகும் நிலையில், கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான மற்றுமொரு இடத்தினை சுகாதாரத்துறை மற்றும் நிபுணர்கள் விரைவில் அடையாளப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Post a Comment