வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி - உண்மை நிலை என்ன?

நாட்டின் பல்வேறு அரச வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது சடுதியாக அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வைத்தியசாலைகளில் பாரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், இடபற்றக்குறை நிலவுதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், காலி கராப்பிட்டிய வைத்தியசாலை, ரத்னபுர வைத்தியசலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா நோயாளர்களை வைத்தியசலையில் அனுமதிக்க முன்னர் சம்பந்தப்பட்ட சுகாதார தரப்பினருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் லால் பணப்பிடிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையின் கொரோனா பிரிவில் உள்ள படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வைத்தியசாலையிலுள்ள கட்டில்கள் நிரம்பியுள்ள நிலையில், அதிகளவானவர்கள் நிலத்திலும், கிடைக்கும் இடத்திலும் அமர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சடுதியாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையே குறித்த நிலைமைக்கு காரணம் என விசேட வைத்திய நிபுணர் லால் பணப்பிடிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் பதிவான ராகம வைத்தியசாலைக்கு நேற்று விஜயம் செய்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, கொரோனா சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அவதானித்தார்.

வைத்தியசாலையின் சில விடுதிகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகள் பலவற்றில், அவசர சிகிச்சைப் பிரிவுகளும் கொரோனா தொற்றாளர்களால் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இரத்தினபுரி மாவட்ட போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுள்ள நான்கு கட்டில்களும் நிரம்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், பதுளை வைத்தியசாலையிலும் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையிலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நேற்றைய நாளில் 46 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 163 கொரோனா தொற்றாளர்கள் கராபிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கராபிட்டிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, இருதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும், வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளில் இருந்து பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலைமை கட்டுப்பாட்டை மீறினால், உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.