தற்போதுள்ள கொரோனா அபாய நிலையை கருத்தில் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என கொரேனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
வேலை நிமித்தம் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், வழங்கப்பட்ட சலுகையை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அனைத்து மக்களையும் அவர் கேட்டுக்கொண்டார்.
Post a Comment