மாகாணங்களுக்கு இடையில் இன்று முதல் பயணிப்போருக்கு ஓர் விசேட அறிவிப்பு.

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமையினால், தொழில் நிமிர்த்தம் செல்பவர்கள் மாத்திரம் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவையை பயன்படுத்துமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை, வேலை நிமிர்த்தம் செல்வோருக்கு, தமது பஸ்களில் எந்தவித பிரச்சினையும் இன்றி பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறின்றி, மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க முயற்சிப்போர், பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அரச ஊழியர்களை இன்று (02) முதல் வழமை போன்று பணிக்கு அழைத்துள்ள பின்னணியிலேயே, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேலைக்கு செல்வோரின் நலன் கருதி, இந்த பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவைகள் காலை மற்றும் மாலை வேளைகளிலேயே முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.