தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்படுமா? இன்று வெளியான தகவல்.

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை நீடிப்பது தொடர்பிலும் மற்றும் ஊரடங்கை தளர்த்துவது தொடர்பிலும் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என்று அமைச்சரவை இணைபேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்.... விசேட வைத்திய நிபுணர்கள், உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தும்.

விசேட வைத்திய நிபுணர்கள் , உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய விசேட வைத்திய நிபுணர்கள் உள்ளிட்டோரின் ஆலோசனைகளுக்கமையவே செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதற்கமைய அரசாங்கம் என்ற ரீதியில் மருத்துவ தரப்பினரின் யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை 6ம் திகதியுடன் நீக்குவதா? நீடிப்பதா? என்பது தொடர்பான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்றைய தினம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.